Monday, October 06, 2008

செல்வாவும் நானும்................



எங்கே இருந்து சார் வருது உங்களுக்கு இந்த கர்வம்?கொஞ்சம் படுச்சுட்டோம்கிறதிலேர்ந்தா? இல்ல கொஞ்சம் காசு பணம் இருக்கு அப்புடிங்கிறதினலயா? சொல்லுங்க எதிலேர்ந்து ? அப்புடின்னு அலைபாயுதே படத்தில ஒரு வசனம் வருமே...........


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேலூர்.


இங்குதான் நானும் செல்வாவும் ஒன்றாகப்படித்தோம், இருவருமே படிப்பில் கெட்டி(அப்ப) என்பதால் எளிதில் நண்பர்கள் ஆனோம்.இருவருமே எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது; காலையில் குளிக்க, அப்புறமா இன்ரோல் பெல்லில் ஒன்னுக்கு அடிக்க,மதியம் சத்துணவு வாங்கி சாப்புட, சாயங்காலம் வெளையாட,நைட்டுக்கு தூங்க மட்டும் அவுக அவுக வீட்டுக்கு. (இல்லாட்டி எங்கப்பா என்னை தோலை உருச்சிருவாரு) என்ன தீனி வாங்குனாலும் என்னை இல்லாம திங்காது என் செல்வா,இப்படித்தான் நாளோறு வண்ணம் பொழுதொருமேனியா எங்க நட்பு வளந்திச்சி.


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்தியமங்கலம்.


அஞ்சாம் வகுப்பிலே நாந்தேன் பஸ்ட்டு, ரெண்டு நம்ம செல்வா, அடுத்து சத்திமங்கலம் போகணும் ஆறாம் வகுப்பு. இப்பதான் நம்ம சேட்டை ஆரம்பம், புளி திருடி முந்துரிப்பழம் வாங்குறது, குவாட்டர் பாட்டில் எடுத்து ஐஸ் வாங்குறது, ஆனாலும் படிப்புல சோடை போகல ரெண்டுபேருமே.இந்த தடவை நானும் செல்வாவும் மாறி மாறி பஸ்ட்டு , செகண்டு எடுத்தோம்.ஒரு நாளு எட்டாம் வகுப்புல எல்லாரும் என்ன படிக்க போறியனு, எங்க தமிழ் அய்யா கேட்டாரு? நாங்க ரெண்டு பேருமே வக்கீலுனு சொன்னோம்,இப்படிதான் எங்க ஊரு ரோட்டுல போற ரூட் பஸ் மாதிரி வேகமா போச்சி எங்களோட நட்பு....


புனித ஆரோக்கிய அன்னை உயர்நிலைப்பள்ளி, கீரனூர்.


எட்டாம் வகுப்பு முடிந்துவிட்டது. இனிமே கீரனூருக்கு போகணும், எத்தனை குஷி எங்களுக்கு மொத மொறையா பஸ்ல போறொம், இந்த தடவை கொஞ்சம் வருத்தம் செல்வாமேல, செல்வா பஸ்ட்டுனு, அப்புறம் இன்னொரு வருத்தம் செல்வாவுக்கு மீசை லைட்டா வந்துருச்சி; இந்த நேரத்திலதான் எங்களுக்கு கேர்ள் ப்ரண்ட்டெல்லாம் அறிமுகம் கவிதா, ராணி, தமிழரசி அப்புறமா சூர்யான்னு ஏகப்பட்டது.இந்த தடவை நாங்க ரெண்டு பேருமே படிப்புல பதினாலு , பதினைந்துன்னு போயிக்கிட்டு இருந்தோம்.. முதல் பொதுத்தேர்வு., யாரு எங்க ஊருல பஸ்ட் வருவது என்பது தான் போட்டியே. ஊருக்கே தெரியும் செல்வா அல்லது நான்.முதல் முறையா நாங்க போட்ட போட்டி இதுதான்.


ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.


பத்தாம் வகுப்புல எங்க ஊருக்கு நாந்தான் பஸ்ட், செல்வா செகண்ட்.இப்ப எனக்கும் மீசை மொளைக்குது கூடவே கொஞ்சம் ஆசை, கர்வம், காதல், அகம்பாவம்....பஸ்ஸில் ஹீரோவா மாறி வரும் எனக்கும், படிப்பில் ஹிரோவா மாறி வரும் செல்வாவிற்கும் சின்ன இடைவெளி. அந்த இடைவெளி, எனக்கு புதிதாக கிடைத்த பஸ் நண்பனின் காதிலியிடம் ஏதோ ப்ராக்டிகல் சம்மந்தமாக செல்வா பேசப்போக நான் என் புது நண்பனுக்காக செல்வாவிடம் போட்ட முதல் சண்டை,அப்புறமா என்னை கெமிஸ்டரி வாத்தியார் அடிக்க அதை செல்வா நண்பர்கள் மத்தியில் சொல்லி சிரிக்க! இப்படியா எங்கள் நட்பின் இடைவெளி அதிகமாயிடுச்சி. எப்பவாவது பார்த்தால் சிரித்துகொள்பவர்களாக மாறினோம்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு, இப்படி திரிந்தால் நான் எப்படி பாஸாவது ? ஆனால் எங்க செல்வாதான் ஊரில் ப்ஸ்ட்.ஒரு நாள் டி.சி வாங்க நான் போனபோது செல்வாவும் வந்திருந்தான்.அப்போது அவன் ஒரு பார்வை பார்த்தான் பாருங்க , அதில இருந்தது அவனின் கர்வம். அதற்கப்புறம் நாங்க சந்திக்கவே இல்லை. பின்னே அவன் இஞ்சினியரிங் காலேஜ்ல படுச்சி, மெட்ராஸ்ல ஏதோ கம்ப்யூட்டர் இஞ்சினியரா இருக்கான்னு அவுக அம்மா சொன்னிச்சி.


மேலூர் தார் ரோடு.


ரோட்டில் ஒரு நாள் சைக்களில கொத்து வேலைக்கு நான் போகும் போது பின்னாடிய வேகமா வ்ந்த ஒரு சிகப்பு காரு என் மீது மோதி விட்டு கொஞ்சம் தள்ளிபோய் நின்னது. காருலேர்ந்து கண்ணாடிப்போட்ட ஒருத்தரு என்னை பார்த்து சிரிச்சுட்டு போயிட்டாரு .அப்புறமா கேட்டா அட! அது நம்ம செல்வா!!

இப்ப சொல்லுங்க சார் ...எங்க இருந்து வருது சார் இந்த கர்வம் கொஞ்சம் படிச்சதுனாலயா ,இல்ல கொஞ்சம் காசு பணம் இருக்கு அப்படிங்கிறதனாலயா.............
draft

5 comments:

Sanjai Gandhi said...

இது நிஜக் கதையா? அவர் கம்ப்யூட்டர் இஞ்சினியர்.. சரி..
நீங்க இப்போ பங்களாதேஷில் தானே இருக்கிங்க?

ஒன்னுமே புரியலையே.. இருங்க ஒருவாட்டி லேபில பாத்துக்கிறேன்.. :(

விலெகா said...

என்னையும் வந்து பார்த்து படித்த, ஐயா பொடியன் அவர்களுக்கு கோடி நன்றிகள்!
இது கற்பனையும் உண்மையும் கலந்த ஒரு மொக்கை கதை.

புதுகை.அப்துல்லா said...

அட நீங்க நம்ப ஊரா? நான் புதுகைங்க. அப்புறம் எங்களூக்கு உங்க ஊருல வயல் இருந்துச்சு. அப்புறம்வித்துட்டோம். அதில் இப்ப ஓரு அட்டை கம்பெனி கூட இருக்கு :)

விலெகா said...

நன்றி!
புதுகை அப்துல்லா அண்ணண் அவர்களுக்கு.அண்ணா உங்களை பார்த்துதான் நான் வலைப்பதிவையே தொடங்கினேன்.

ஜியா said...

:)))

Ennoda friend perum Selva... sathyamangalam... computer engineer.. chennaila velai...

Aana avan romba nallavanga... Vaazkaila ithu maathiri nanbargal venumnu naama ethirpaarpoamla... athu ellaathaiyum poorthi seira maathiri oru nalla nanban avan... :)))