Monday, November 24, 2008

க‌லைஞ‌ர் பாடும் பாட்டு!

இப்போ இருக்கிற சூழ்நிலையில நம்ம அரசியல் கட்சித்தலைவர்கள் அனவருக்கும், ஆளாளுக்கு ஒரு பிரச்சனை இருக்கு.(ஆமா, என்னைக்குதான் இவுங்க பிரச்சனை பண்ணாம இருந்துருக்காங்க!) இது மாதிரி நேரத்துல அவங்கள பாடச்சொன்னா என்ன பாட்டு பாடுவாங்க...
..............................**************.........................
நம்ம பாடச்சொன்னப்ப கலைஞர் இப்படி பாடுகிறார்:"என் வீட்டு கன்னுக்குட்டி என் மீது மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடா மாறா என் மாறா"

அப்புடியே "மாறா"ம இருங்க., நாங்க அடுத்த இடத்துக்கு போறோம்,
.............................*****************..................................
வை.கோ யார் மேல கோபமா இருக்கார்னு தெரியல விசும்பிக்கிட்டெ இப்புடி பாடுறார்: "சொர்க்கமெ என்றாலும் அது நம்ம ஊர போல வருமா? அது லண்டனே என்றாலும் நம்ம லால்குடிக்கு ஈடாகுமா"

ஈடாகாவே,ஆகாதுங்க,.நீங்க பாடுவ‌தை மட்டும் நிறுத்துங்க.இல்லாட்டி சுத்தி இருக்கிரற‌வுகளுக்கு ஏதாச்சும் ஆகிப்போயிரும்.
...........................**************.............................
சரி வாங்க ஒரு எட்டு தைலாபுரம் போயிட்டு வந்துருவோம்னு போனா அங்க நம்ம மருத்துவரய்யா:"மாம்பழம் விக்கிற கண்ணம்மா உன் மனசுக்குள்ள என்னம்மா,என் கூட்டணி வச்சுக்க சம்மதமா" .
ஐய்யாயோன்னு நாம தெரிச்சு ஓடிவந்துக்கிட்டு இருக்கையில..
.............................***************..............................
பொள்ளாச்சியில நம்ம கேப்டன் சார் சூட்டிங் நடக்குதுஙக.அதுல ஒரு பாட்டு வருதுங்க என்னன்னா:"தனியெ தன்னந்தனியே நான் காத்து காத்து இருந்தேன்,மனமே பொறு மனமே கம்யூனிஸ்டு வருவார்கள் மனமே".
லால லாலலா லால லாலலா பாட்டா இருக்குமுனு பார்த்தா இது நொந்த லாலா பாட்டாலப்பா இருக்கு..
.....................************.......................
இப்புடி அவுங்க‌ பாட்டை கேட்டதில்ல‌ என் ம‌ண்ட‌ காஞ்சி, ம‌றை க‌ழ‌டும் நேர‌த்தில‌ திருவாள‌ர் பொதுஜ‌ன‌ம் இப்புடி பாடுறாங்க‌:"தி.மு.க‌ ஆண்டா என்ன?, அ.தி.மு.க ஆண்டா என்ன? உழைச்சாதான் ந‌ம்ம‌ளுக்கு சோறு".
................****************.......................
உண்மைதாங்க‌ நான் என் பொழ‌ப்ப‌ பாக்குறேன் சாமீ "பாட்டு கேட்டா வீட்டுக்கு யாரு கொடுப்பா சோறு ".

நீங்களும் எனக்கு ஒரு ஓட்டைபோட்டுட்டு போயிருங்க:))

Sunday, November 23, 2008

புளிச்சமாவு!!!

சும்மா இருக்க முடியாம கவித(?)எழுத போறேனு போயீ தமிழச்சி,வாலி,தாய்க்காவியம்.,இப்புடீன்னு எழுதி அவஸ்தைப்பட்டு,காரி துப்பப‌ட்டு,கடைசியா இனிமே ஒழுங்கா இருப்பியான்னு உன்னாலே உன்னை உதக்கப்பட்டு...

போதுமுடா நிருத்துடா!! கிறுக்கன் மாதிரி !(என் மனசாட்சி தாங்க)
...................***********************...........................
அதுனால இவுங்க என்ன பேசுறாங்கன்னு கேளுங்க..
மனைவிக்கிட்டெ வந்து கணவன் இப்புடி கேக்குறாரு,ஏம்பா ப்ரிட்ச்ல என்ன வாடை வருது., அதுக்கு அவுங்க சொல்றாங்க,அதுவா புளிச்சமாவு இருக்கு. நாளைக்கு உங்க அம்மா வர்றாங்கள்ல‌ அவுங்களுக்கு தோசை சுட்டுகொடுக்கிறதுக்காக வச்சுருக்கேன்!!!
இப்புடிதாங்க நெறையா வீட்டுல நடக்குது.
...........................***************************.......................
தோழிங்க இரண்டு பேரு இப்புடி பேசிக்கிறாங்க.,ஏய் மாலா இங்க பாரு நேத்து அஜித் வந்து என்னை கல்யாண பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டேண்டி,அதுக்கு மாலா சொல்றாங்க ஆமாண்டி நான் கூட ஒரு கனவு கண்டேன், அதுல ஷாலினி உன்னை வெலக்கமாத்துல அடிக்கிறமாதிரியே இருந்துச்சு.
இந்த புள்ளையல பாருங்களே!
.....................................*********************..............................
நம்மாளு ஒருத்தர் இப்புடி பாட்டு பாடுகிறார்"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" அதுக்கு நம்மாளுவோட மனைவி இப்புடி பாடுறாங்க "கணவன் அமைவதெல்லம் சைத்தான் கொடுத்த வரம்".
நம்மாளு எப்பவுமே வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டாருங்க..
.............................*********************.............................
ஏட்டய்யா ஒருத்தரு தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போன நம்மாள புடிச்சு.,"ஏன்யா தண்ணீயடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போறேன்னு கேட்குறாரு,அதுக்கு நம்மாளு சொல்றாரு தண்ணிபோடலனா வண்டி ஓட்ட முடியாதுங்க சார்"
ஏட்டையா இனிமே ஏதாச்சும் கேட்பாருங்கிறிய!
............................**************************..........................

இத படிச்சிட்டு வெறிகொண்ட வேங்கையா மாறாமல் எனக்கு ஒரு ஓட்டை போடுங்க சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

க‌விஞ‌ர் வாலியின் கவிதை

வாலியின் கவிதையுடன் என் கவிதயும் இணைந்தால் அது எப்படியிருக்கும் என்பதை பாருங்கள்:வாலி திருச்சி வானொலி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவர் ஒரு கவிதை எழுதினாராம்.,(எப்போதோ படித்தாக ஞாபகம்)அது என்னவென்றால்......
தன் தலையை

சீவியவனுக்கே!

தண்ணீர் தருகிறது
இளிநீ!!
என்னொவொரு அருமையான கவிதை பாருங்க.
இதை படிச்சதுக்கப்புறம் நம்ம சும்மா இருப்போமா.,
எழுதுடா விலெகா கவிதயை....

கேள்வி:

தன் தலையை

திறந்தவனுக்கெ!

போதை தருகிறது

பீர்!

ஆனால்.........

தன் மண்டையை

திறந்தவனுக்கு!

என்ன தருகிறான்

மனிதன்!


இப்ப‌டி நான் க‌விதை எழுதினா தெரிஞ்ச‌வ‌ங்க‌ளே அனானியா வ‌ந்து ஆணீய‌ புடுங்குறாங்க :))

இப்போ தெரிஞ்சுருக்குமே வாலிக்கும், காவாலிக்கும்(நாந்தாங்க) உள்ள வித்தியாசம்.
இருந்தாலும் ஆர்வக்கோளாரு நம்மளை இருக்க விடமாட்டேங்கிற‌து.ம‌ண்டைய‌(!) கொடைஞ்சி ஒரு க‌விதயும் எழுதிட்டேன்.(ந‌ல்லா மாட்டிகிட்டீங்க‌ போங்க‌)

சுய‌ந‌ல‌வாதி..

என் அப்பாவும் சுய‌ந‌ல‌வாதிதான்


த‌ன் க‌ன‌வுக‌ளை என் மீது சும‌த்தி

என்ன‌யும் பெரிய‌வான்னாக்கியதால்
..

மாற்ற‌ம்?

ஆறு வ‌ருட‌ம் க‌ழித்து

ஊருக்கு வ‌ந்த‌ என்னிட‌ம்

அம்மா கேட்டாள் என்னிட‌ம்

ஏதாவது தெரிகிற‌தா மாற்ற‌ம் என்று

எப்ப‌டி சொல்வேன் என் அம்மாவிட‌ம்

என் காதலிதான் என் ந‌ண்ப‌னின்
மனைவியென்று !

என் க‌விதைய‌ ப‌டிச்சிட்டு வாலி என்ன‌ சிரி சிரிக்கிறார் பாருங்க‌..

அதுனாலே ஐயாமார்களே கோவ‌ப்ப‌டாம‌ ஒரு ஓட்டை போடுங்க‌:))

Saturday, November 22, 2008

தமிழச்சியிடம் ஒரு கவிதை




தமிழச்சியின் ஒரு கவிதை

சூர்ப்பனகையின்
மூக்கையும் முலையையும்
அறுத்த‌ ராம‌ன்
ந‌ல்ல‌வென்றால்!
சீதையின்
மூக்கையும் முலையையும்

அறுக்காத‌ ராவ‌ண‌ன் ஏன்
கெட்ட‌வ‌ன் ஆனான்!
விலெகா இனிமேலும் நீ சும்மா இருக்க‌லாமா?! சொறிடா உன் ம‌ண்டைய‌ கேளுடா ஒரு கேள்விய

அடுத்த‌ பெண் மீது
ஆசைப்படாத‌ ராமன்
ந‌ல்ல‌வ‌ன் எனும் ப‌ட்ச‌த்தில்.,
அடுத்த‌வ‌ர் ம‌னைவியை
அப‌க‌ரித்து சென்ற‌

ராவ‌ண‌ன் ஏன்
கெட்ட‌வ‌னாக‌ இருக்க‌கூடாது?



அய்யயோ! ஆழ‌ம் தெரியாம‌ கால‌விட்ட ‌க‌தையா., அக்காகிட்ட‌யே கேள்வி கேட்டுட்யே!

இது மாதிரி ஆளுங்கள கூட்டி வந்து உன்னைய அடிக்கபோறாங்க போ !!

பி.கு:இதெல்லாமே ஒரு நகைச்சுவைக்காக‌தான்:))

அதுனால‌ ஐயாக்க‌ளே! கோச்சிக்காம‌ ஓட்டை போடுங்க‌

Wednesday, November 19, 2008

தாய்க்காவியம்....

எனக்கெ தெரியும்,எனக்கு கவிதை எழுத தெரியாதுன்னு.,ஆனாலும் ஒரு குருட்டு தைரியம் எழுதிட்டேன்.இயக்குனர்பார்த்திபன்(அவர் எங்கே? நான் எங்கே?) அவர் கிறுக்கலில் இப்புடி எழுதியிருப்பார் உரைநடையை இரண்டு வரி இரண்டு வரியா எழுதுனா அதாங்க கவிதை.(அது அவரு எழுதினா!)எப்புடியோ நானும் எழுதிட்டேன்.(என்னனுதான்னு எனக்கே தெரியல)


கஞ்சிய எங்களுக்கு கொடுத்துவிட்டு‍‍‍.,
வெறும்
தண்ணியை குடித்தவள்
நீ!

மிஞ்சிய பணத்தில் எல்லாம்
எங்களுக்கு அஞ்சியே!
ஆடைகள் கொடுத்தவள்
நீ!

மக்கிய குப்பைகள் அள்ளி
எங்களின் மானத்தை காத்தவள்
நீ!

பெட்டையாய் பிறந்தாலும்
எங்களுக்குள் ஆண்மையை
அளித்தவள்
நீ!

மட்டயை கட்டிவிற்றே.,
எங்களை மாடிவீட்டிற்கு
உய‌ர்த்திய‌வ‌ள்
நீ!

இப்ப‌டிப்ப‌ட்ட
நீ!நீ!நீ!நீ!நீ!

க‌ட்டையான‌ அன்று.,
ச‌ட்டையை கூட‌
க‌ல‌ட்ட‌ விட‌வில்லை,
எங்க‌ளின் க‌வ‌ர‌வ‌ம்....



தெரியாம எழுதிப்புட்டேன் சாமீ!
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))


Monday, November 17, 2008

விவகாரத்துக்காண காரணங்கள்:

நகைச்சுவையா பேசுரவுங்களுக்கதான் நண்பர்கள் அதிகமா இருக்கும்,ஏன்னா அந்த இடமே கலகலப்பா இருக்கும் பாருங்க.........

நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு விவகாரத்து வாங்கிட்டாருங்க,அவர்ட போயி நம்மாளு ஒருத்தர் இப்புடி கேட்டுருக்காரு.,ஏங்க நீங்க உங்க மனைவியை விவாகாரத்து பண்ணீங்க அப்படீன்னு,அதுக்கு அவரு சொல்லியிருக்காரு "அவ ஏன் மனைவியா" இருக்கிறதினாலதான்னு.
பாவம் மனுசன் ரொம்ம்ப அவஸ்தைபட்டுருப்பாரு போல‌
………………….****************……………………………

நோயாளி ஒருத்தரு நம்மளுக்கு தெரிஞ்ச டாக்டருக்கிட்ட வந்து சிகிச்சை எடுத்துகிட்டு இருந்தாரு,நோயாளிக்கிட்ட ஒரு நாள் டாக்டர் சொல்லியிருக்காரு நீங்க இன்னும் இரண்டு மணி நேரத்தில சாக போறீங்க,அதனாலே கடைசியா யாரை பார்க்கணும்னு விரும்புரீங்கன்னு கேட்டுருக்காரு உடனே நோயாளி:"நல்ல டாக்டரை "தாங்க நான் கடைசியா பார்க்க விரும்றேன்.
நாசமா போச்சு! இது உங்களுக்கு முன்னமே தெரியாதா?
……………………*******************……………………
நம்ம பயலுவ இப்புடி பேசிக்கிறாய்ங்க மாப்பு!அன்னையர் தினத்தில என்னடா செஞ்ச? அதுக்கு இன்னொருத்தன் சொல்றான், அதுவா மாப்பு! சில பொண்ணுங்களை அன்னைகளாக்க முயற்ச்சி பண்ணேன் மாப்பு..

மாட்டீங்கடா நீங்க திருந்தவே மாட்டீங்க !
………***************………
ராங் ரூட்ல வந்த ஒருத்தன போலிஸ் மடக்கி இப்புடி கேக்கிறாரு:தம்பி ஏம்பா,ராங்கா வந்தே, அதுக்கு இவன் சொல்றான்:சரியான ரூட்ல வ‌ந்தா உங்களை பார்த்துருக்க முடியாதே சார்!
மடக்கிப்புட்டியே மன்னாரு....
……………*****************………………….
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))

Sunday, November 16, 2008

திரிஷாவின் அரை நிர்வாண போஸ்!

வலைப்பதிவு உலகமே சட்டக்கல்லூரி சம்பவத்தினால் கொதிப்படைஞ்சிருக்கு.,இப்படியே இருந்தா நல்லாவா இருக்கு கொஞ்சம் கூலாவுங்கப்பு...............
எல்லாரும் கோவமா இருந்ததாலே குழைந்தைகள் தின வாழ்த்து சொல்லமுடியல.,அதுனாலே இன்னிக்கு சொல்லிக்கிறேன்.
திரிஷா குட்டிக்கு குழந்தையர் தின வாழ்த்துக்கள் :
.......................................... *************************...............................................

ஏம்மா இப்புடி சட்டை போடாம நிக்கிறியே நாலு பேர் பார்த்தா என்ன சொல்லுவாக!சட்டை போட்டுக்கடி கண்ணு!(இதாங்க, திரிஷாவின் அரை நிர்வாண போஸ் :-))
சட்டை போட்டுக்க சொன்னா தரையிலே சிரிக்கிரதை பாரு!!!



பள்ளிக்கூடம் போறியத்தா, பத்திரமா போயிட்டு வாத்தா!கார்க்கி பார்த்தாருன்னா லெட்டர் கொடுத்துருவாரு,காலங்கெட்டுகெடக்கு தாயி!
கேள்வி:திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
எல்லாரும் என் மேல கடுப்பாகம இப்படி சிரிச்சிக்கிட்டு தமிழிஷ்ல ஓட்டை போட்டுருங்க சாமி :))

Friday, November 14, 2008

பங்களாதேஷில் நாறிப்போன நம்மானம்(!?)

என்னை என் வாத்தியார் மேல என்ன படிக்கப்போற என கேட்டப்ப நான் உடனே சொன்னது வக்கீலுக்கு, ஏன் தெரியுமா எல்லோரும் சொல்லுவார்கள் வக்கில்,டாக்டர் இவுங்களிடம் எல்லாம் உண்மையை தான் சொல்லனும்னு அதுக்காகத்தான்.,அப்புடி ஒரு உன்னதமான படிப்பை நடுவீதிக்கு கொண்டுவந்திட்டாங்களேயா நாறப்பயலுவ:(

செத்த பாமபை அடிக்கிற‌வனை நம்ம ஊரில வீரமில்லாதவன்னு சொல்லுவாங்க,அப்புடி ஒரு பையனை போட்டு செத்த பாம்பை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்களே இதான் வீரமா?

நான் இப்ப இருக்கிறது பங்களாதேஷத்தில, இங்கே எப்பவுமே கல்லூரிகளிலே ஒரே கலவரம் நடந்துகொண்டேயிருக்கும். அப்ப நான் அவர்களிடம் சொல்வது இது மாதிரியெல்லாம் எங்க ஊருலே நடக்காது.,நேற்று நான் தமிழிஷ் பார்த்துக்கொண்ருந்த பொழுது ஒரு பங்களா நண்பனும் என் அருகில் இருந்தான், மொழி தெரியாவிட்டாலூம் படத்தை பார்த்து புரிந்துகொண்டான்,என்னிடம் விளக்கம் கேட்டறிந்து கொண்டு அவன் சொன்னது இது தான் "உங்க ஊருக்கு எங்க ஊரு எவ்வளவோ தேவலை".என்னால் தலைகுனிவதை தவிர வேறு ஒன்றும் கூறமுடியவில்லை.
ஒவ்வொரு வலைப்பதிவிலும் தெரியும் ஆத்திரம் அவர்களை ஒன்றும் செய்து விடப்போவதில்லை,சாதிகளை கொண்டே அரசியல் நடந்துகொண்டிருக்கும் நம் தமிழகத்தில் இன்று ஒரு பாரதிக்கண்ணன்,நாளை ஒரு சாரதிக்கண்ணன்.
இவர்கள் ஒரு நாளும் திருந்தப்போவதில்லை.

ஒன்று மட்டும் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" தாய் கொடுத்த பாலை இப்படி ரத்தமாக ஓட விட்டுருக்கிறீர்களே, உங்களின் ரத்தமும் ஒரு தாய் கொடுத்ததுதானே?இரண்டும் ஒரே நிறந்தானே?"., ரத்தத்தை கொண்டு சாதீ வளக்காதீர்கள். முடிந்தால் அறிவைக்கொண்டு "தமிழ் சாதியை" வளருங்கள்.

பங்களாதேஷில் நாறிப்போன நம் மானம்(!?)

Tuesday, November 11, 2008

நயந்தாராவை விரட்டிய விஜயக்குமார்?!

நயந்தாராவை விரட்டிய விஜயக்குமர்!?









அம்மா,தயவு செய்து இங்கிருந்து கிளம்பிருங்கம்மா.,
இது ரொம்ப கவுரமான ஊரு,இங்க இருக்குற பெரியவுங்க, இளவட்டம்,சின்னம் சிருசுக எல்லாம் பீடி,சிகரெட்,சாரயம் குடிக்காத ஊரும்மா இது.

இது வரைக்கும் நாங்க கட்டிக்காத்த பெருமயை நீங்க வந்து கெடுத்திடாதிங்கம்மா, இத ஏன் நான் சொல்றேன்னா,எந்த ஒரு பயலும் இது வரக்கும் சலனப்பட்டதில்லை.

அதுனாலதான் அரசாங்கத்தாலே மாதிரி கிராமம்னு பேரெடுத்துருக்கு,ஏதோ எங்க கிரமத்தையும் சினிமாவுல காட்டினா நாலு பேருக்கு தெரிஞ்சு அதுனாலே மத்த கிராமங்களும் மாறி., நல்ல ஒரு நிலைமய நம்ம தமிழ் நாடு அடையணும்ங்கிற நப்பாசையில இதுக்கு அனுமதிகொடுத்தோம்,ஆனா அதெல்லாம் விட்டுட்டு இப்படி அரைகொரை ஆடை உடுத்தி, ஆபாசமா கார்மேல கால வச்சி பார்க்கவே ஒரு மாதிரியா,அம்மா தயவு செய்து இங்கிருந்து கிளம்பிருங்கம்மா என்று ஊர் பெரியர் விஜயக்குமார் சினிமா நடிகை நயந்தாராவை விரட்டினார்.(ஹி,ஹி,ஹி நல்லா ஏமந்திங்களா)

டிஸ்கி1:அந்த மாதிரி கிராமம் எங்க ஊரு.(எல்லாம் ஒரு ந‌ப்பாசைதான்)


டிஸ்கி2:படத்தை பார்த்து கதை சொல்லு என்று இரண்டாம் வகுப்புல இருக்குமே,அது போல‌தான் இதுவும்.க‌தை ந‌ல்லா இருக்கா(ஹி,ஹி,ஹி.)






Saturday, November 08, 2008

ச்சும்மானாச்சுக்கும்........

ச்சும்மானாச்சுக்கும்........
சிரிப்புங்கிறது ஒரு மருந்துங்க!அதனாலதான் துன்பம் வரும் வேலையிலும் சிரிங்கன்னு பெரியவுங்க சொல்லியிருக்காங்க.(அதுக்காக எல்லா நேரத்திலேயும் சிரிக்காதிங்க அடி விழுந்துரும்)

.........................*********************...................................

அமெரிக்காவுல இருக்கிற நாசா ஒருத்தர நிலவுக்கு அனுப்ப முடிவு செஞ்சு அனுப்பி வச்சுட்டாங்க.,
பாதி வழியிலே குதிச்சுட்டு நம்மாளு இப்புடி கத்துறார்,என்ன தைரியம் இவங்களுக்கு என்னையே ஏமாத்தபாக்கிறாங்க! இன்னிக்கு தான் "அமாவாசை" ஆச்சே நிலவு எப்புடி இருக்கும்.
நாச(ர்)மாப்போச்சு!!!
.........................*********************...................................
கல்லூரில முதல்வர் தாமதமா வந்த பையனிடம் கேக்கிறார் இப்புடி, தம்பி ஏம்பா லேட்டா வந்தே உன் வகுப்புலே உள்ளவங்க எல்லாம் கரெக்டா வந்தராங்க?
அதுக்கு பையன் சொல்றான்:சார் ஆடெல்லாம் கூட்டமாத்தான் வரும்!சிங்கம் எப்பவுமே தனியாத்தான் வரும்!
ஆமா இவரு பெரிய சூப்பர்ஸ்டார்னு நினைப்பு!
.........................*********************...................................

நம்ம சர்தார் நேர்முகத்தேர்வுக்கு போறாரு, அங்க இப்படி கேள்விக்குறாங்க., ஏங்க நீங்க எங்க பிறந்தீங்க?
சர்தார்:பஞ்சாப்ல,

அதுக்கு அவரு கேக்கிறாரு:எந்த பார்ட்,

சர்தார்:மொத்த உடம்புமே பிறந்தது அங்கேதாங்க!!
கலக்கிட்டியே சர்தாரு..
...............................****************...............................

ஒரு பொண்ணு கார் ஓட்டிட்டு போயிட்ருக்கா,அவளை போலிஸ் புடுச்சி லைசென்ஸ் கேக்கிறாங்க?

இந்த பொண்ணு சொல்றா:நான் ட்ரைவிங் கத்துக்கிட்டு இருக்கேன் சார்,உடனே போலிஸ்: பயிற்ச்சியாளர் எங்கேன்னு கேக்கிறார்,அதுக்கு இந்த பொண்ணு சொல்றா:இது கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் சார்.
ங்கொய்யாலே பொண்ணு கில்லாடியாக்கிதே!
.......................................**********************..................................

Sunday, November 02, 2008

ச்சும்மானாச்சுக்கும்........



ச்சும்மானாச்சுக்கும்........
டீச்சர் நமிதா

சிரிப்புங்கிறது ஒரு கலைங்க!!!(அதுக்காக நீங்க போயீ பட்டமெல்லாம் வாங்க வேண்டாம், இத படிச்சாவே போதும்)

பள்ளிக்கூட‌த்திலே டீச்ச‌ரு ஒரு பைய‌ன‌ப்பார்த்து கேக்கிறாங்க‌,த‌ம்பி ராஜா ராம் மோக‌ன் ராயை ப‌த்தி சொல்லு?

அதுக்கு பைய‌ன் சொல்கிறான்: அவுங்க எல்லோரும் நல்ல நண்பர்கள்.

இதுவே நமிதாவ பத்தி கேட்டிருந்த‌ க்ரெக்டா சொல்லியிருப்ப்பான்

. .......................**********************..............................

மறுநாள் டீச்சர் இன்னொரு பையனை பார்த்து கேக்கிறாங்க., தம்பி நீ எந்தஊருல பிறந்த.,

பையன் சொல்றான்:நான் திருவனந்தபுரத்தில டீச்சர்.

உடனே டீச்சர் சொல்றாங்க: ஒ.கே, அதுக்கு ஆங்கிலத்துல ஸ்பெல்லிங் சொல்லு.,

பையன் சொல்றான்: நான் பிறந்தது கோவாவுல மேடம்.

என்ன கில்லாடியான பையன் பாருங்க!

.............................**********************.......................................

நம்மாளு ஒருத்தரு ஒரு இல்லத்தரசியிடம்,

இப்படி ஒரு கேள்விக் கேக்கிறாரு:ஏங்க உங்க கணவர் வச்சிருக்கிற புக்லே எந்த புக்கு உங்களுக்கு புடிச்ச புக்கு?உடனே அவுங்க சொல்றாங்க " "என் கணவரோட செக் புக்".

அதனே பார்த்தேன்!

.....................................********************...........................................

நான் ஒரு நாள் நம்மாளிடம் ஒரு கேள்விக்கேட்டேன்..

மனைவிக்கும்,அடுத்தவன் மனைவிக்கும் என்னடா வித்தியாசம்னு,

அதுக்கு அவன் சொல்றான்:மனைவி என்பவள் சாக்லெட் மாதிரி எப்ப வேணாலும் சாப்பிடலாம்,

அடுத்தவன் மனைவி என்பவள் ice க்ரீம் மாதிரி உடனே சாப்பிடணும்.என்ன ஒரு விளக்கம் பாருங்க !.

..................................********************...................................

கோழிக்கும்,கொசுவுக்கும் காதல்னா காதல் அப்பிடியொரு காதல்.,

ஒரு நாள் முத்தம் இரண்டு பேரும் மாறி மாறி கொடுத்திக்கிட்டாங்க.,காலையில் பார்த்த கோழி "மலேரியாவுல இருந்து போச்சீ கொசு பேர்டு ப்ளூவில இருந்து போச்சு" .,

வாய் வச்சிக்கிட்டு சும்மா இருந்தாத்தானே..

.................................********************..................................

என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம, அப்டீன்னு திட்டம வோட்ட போடுங்க சாமீ( இப்பெல்லாம் நமிதா படத்த போட்டாதான் உள்ளயே வாராங்கப்ப்ப்ப்ப்ப்பு)

Saturday, November 01, 2008

ச்சும்மானாச்சுக்கும்........

ச்சும்மானாச்சுக்கும்........
"வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்" என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதனால் இப்படி நான் எழுத போக........‌
....................***********.........................
இரண்டு தோழிங்க இப்படி பேசிக்கிறாங்க, என்னென்னா.. ஒருத்தி:ஏ நைட்டு ஒரு கனவு கண்டேன்பா, அதுலே ஒருத்தன் என்னை கொல்லவருகிற மாதிரி இருக்கு.,இன்னொருத்தி: அதைப்பத்தி கவலைப்படேதே, கனவுமட்டும் நிஜமானா டெய்லியும்ல நான் கர்ப்பமாக வேண்டியிருக்கும்!!. இங்க பார்டா..
.....................*************.............................
இரண்டு நண்பர்கள் என்ன பேசுறாங்கன்னா..டேய் பங்காளி, உன் கேர்ள் ப்ரண்ட்டுக்கு நீ போகமலே வித்தியாசமா நீ முத்தம் கொடுக்கலாம்,எப்படின்னா? நீ உன் லவ்வரை ஒரு இடத்துக்கு வரச்சொல்லிட்டு அப்புறம் எங்கிட்ட அந்த இடத்தை சொல்லு நான் போயீ பத்திரமா முத்தம் கொடுத்துட்டு வந்துவிடுகிறேன் உன் சார்பா. இது எப்படி இருக்கு..
.......................****************.........................
கோவமா இருக்கிற பொண்ணுக்கிட்ட போயி நம்ம பையன் கேக்கிறான்...இங்கப்பாரு நான் எவெரெஸ்ட்ல ஏறினா எனக்கு என்ன தருவே?அதுக்கு இவ சொல்றா..அங்கே இருந்து தள்ளி விட்டுவிடுவேன். ஆளவிடுங்கப்பா சாமீ!!
..........................*****************.............................
நம்ம டாக்டருக்கு அவரிடம் வேலை பார்க்கும் நர்ஸிடம் லவ்வுன்னா லவ்வு அப்புடியொரு லவ்வு., இப்படியிருக்கயிலே,ஒரு நாள் மெனக்கெட்டு ஒரு லவ் லெட்டெர் எழுதி நர்ஸிடம் கொடுத்தார், அதிலே என்னா எழுதியிருந்திச்சின்னா......
I LOVE YOU SISTER.
அட மொக்கைப்பயலே
..........................********************..........................
colleage-க்கு விரிவாக்கம் என்ன தெரியுமா?
C-Come, O-On, L-Lets, L-Love, E-Each, G-Girl, E-Equally.,
இப்ப‌ தெரியுதா COLLEAGE- க்கு நம்ம‌ ப‌ச‌ங்க எதுக்கு நாள் தவறாம போறாங்க.
........................********************................................
அதனால॥ இப்ப‌டி நீங்க‌ சிரிச்சிட்டு என‌க்கு வோட்டை போட்டுட்டு போங்க‌ !
என்ன சிரி சிரிக்கிறாங்க போங்க!!!‌

Friday, October 31, 2008

ச்சும்மானாச்சுக்கும்...

ஆறு வித்தியாசங்கள்!












மேலே இருக்கும் இரண்டு படதுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்!

1)அவர் தமிழ்பேசுவார், இவர் டமில்பேசுவார்,
2)அவருக்கு ரசிகர்கள் அதிகம், இவருக்கு ஜொள்ளர்கள் அதிகம்,
3)அவர் நடித்தால் கண்களில் இருந்து கண்ணிர் வரும், இவர் நடித்தால் வாயிலிருந்து எச்சில் வரும்,
4)அவர் சேலையில் அழகாக இருப்பார், இவர் சேலையில் அல்வாவாக இருப்பார்,
5)அவரை பார்த்தால் கை எடுத்து கும்பிட‌ணும் போல‌ இருக்கும்,இவ‌ரை பார்த்தால் கையை வ‌ச்சிக்கிட்டு சும்மா இருக்க‌முடியாது.( இன்னொறு த‌ட‌வை பார்க்க‌ கை போகும்ங்க‌ த‌ப்பா நினைச்சிட‌திங்க‌.)

6)அவ‌ர் அந்த‌கால‌ ந‌டிகைய‌ர் தில‌க‌ம், இவ‌ர் இந்த‌கால‌ க‌ன‌வுக்க‌ன்னிய‌ர் தில‌க‌ம்.

நீங்க‌ விட்டா அறுப‌து வித்திய‌ச‌ங்களைக்கூட‌ க‌ண்டுபிடிப்பீங்க‌! ஏதோ என்னாலே முடிஞ்சது இவ்ளோதான்..


இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌டிகைய‌ர் தில‌க‌ம் இற‌க்கும் பொழுது எப்ப‌டி இருந்தார் தெரியுமா!

(வ‌லையில் சுட்ட‌து)

Tuesday, October 28, 2008

மரியாதை









  1. மரியாதை:மனிதச்சங்கிலி மூலமாக தமிழர்களின் மானத்தை காப்பற்றிய தமிழக ,முதல்வர் முப்பெரும் தலைவர், முத்தமிழ் காவலர் ஐயா கலைஞர் அவர்களுக்கு,



  2. மரியாதை:தமிழில்தான் பேசவேண்டும் என்று கட்டளையிட்டு, தன் மகளையே அபராதம் கட்ட சொன்ன ஐயா மருத்துவர் அவர்களுக்கு ,



  3. மரியாதை: ஈழ மக்கள் என்று விடிவு பிறக்கிறதோ அன்றுதான் தனக்கும் பிறந்தநாள் என்று,பிறந்தநாளைக் கூட கொண்டாடாமல் வாழும் ஐயா கேப்டன் அவர்களுக்கு,



  4. மரியாதை:எங்கெங்கு தமிழர்கள் இருக்கிருக்கிரார்களோ அங்கெல்லாம் சென்று கலை நிகச்சி நடத்தி கள்ளா கட்டும் தமிழ்த்திரையினர் அவர்களுக்கு,
  5. 5.மரியாதை:இப்படி



படங்களை பார்த்தே ஜொள்ளு விடும் தமிழ் மக்கள் அவர்களுக்கும்,




இது போன்ற அவர்களுக்கு ஈழ தமிழ் மக்களின் சார்பாக மரியைதையை தெரிவித்து கொள்கிறோம்.

(பி. கு): விரைவில் லால ல்லா லால லில்லா விக்ரமன் இயக்கும் மரியாதை படத்தை பார்க்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

Wednesday, October 08, 2008

எம்.ஜி.ஆருக்கு கிடைக்காத ஒன்று!

எம்.ஜி.ஆருக்கு கிடைக்காத ஒன்று!அது ரஜினிக்கு கிடைத்து இருக்கிறது.அதுதான் சூப்பர் ஸ்டார் என்பது, அவரை தவிர வேறு யாரும் இங்கு சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. அதை பற்றி குமுதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம் ............

படைபரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. `ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?' என்ற அறத்துன்பமான நிலை. அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.
சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது. `இனியும் தாமதிக்க முடியாது. முடிவெடுத்தே ஆக வேண்டும்' என்ற நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
ஒரு காலத்தில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறைதான் ரஜினி படம் முகிழ்க்கும் என்றிருந்த நிலையில், `சந்திரமுகி'யைத் தொடர்ந்து உடனே `சிவாஜி' வெளிவர பூரிப்பில் ஒரு சுற்று பெருத்துப் போனார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால் `குசேலன்' வெளிவந்தபோது அந்த மகிழ்ச்சி அடியோடு குளோஸ். காரணம், குசேலனில் இடம்பெற்றிருந்த ரஜினி பேசும் சில வசனங்கள். இந்த வசனங்கள் ரஜினியின் இமேஜை உடைத்தெறிய, `குசேலன்' படமும் ஊற்றிக் கொள்ள, தான் பேசிய வசனங்களுக்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்து, அந்தப் பிரச்னைக்கு அப்போதைக்குப் முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார்.
அந்த சரிவுக்குப் பின், ஷங்கர் இயக்கத்தில், `எந்திரன்' படத்தில் பிஸியானார் ரஜினி. அமெரிக்கா மற்றும் பெரு நாடுகளில் அவர் நடிகை ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், `அக்டோபரில் ரஜினி தனது ரசிகர்களைச் சந்திக்கிறார்' என்ற செய்தி தமிழகத்தில் மெதுவாக கட்டவிழ்ந்தது. `அக்டோபரில் ஆலோசனை! 2011-ல் அரியணை!' என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு அது போனது.இதற்கிடையே நடந்ததுதான் அந்த இன்னொரு முக்கிய நிகழ்வு. அது லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு. பல்வேறு அரசியல் தகவல்களை அள்ளித் தெளிந்திருந்த அந்தக் கருத்துக் கணிப்பில் ரஜினி தொடர்பான ஒரு கணிப்பு, அவரது ரசிகர்களின் உயிர்களை உலுக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லாத சூப்பர் ஸ்டாராக இதுவரை திகழ்ந்து வந்த ரஜினியை, இளைய தளபதி விஜய் தாண்டி விட்டார் என்பதுதான் அந்தக் கணிப்பு. சினிமாத் துறையில் மக்கள் செல்வாக்கில் ரஜினி 16.2 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், விஜய் 16.4 புள்ளிகள் பெற்று, சூப்பர் ஸ்டாரைத் தாண்டிவிட்டதாக அந்தக் கருத்துக் கணிப்பில் காட்டப்பட்டிருந்தது, ரஜினி ரசிகர்களை ஆட்டி அசைத்து விட்டது. ``யானை படுத்தாலும்கூட குதிரை உயரத்துக்கு இருக்குமே? எங்கள் சூப்பர் ஸ்டாராவது சினிமாவில் இரண்டாவது இடத்துக்குப் போவதாவது?'' என கொதித்துப் போனார்கள் ரஜினி ரசிகர்கள். இந்தநிலையில் அக்டோபரில் ரஜினி அவரது ரசிகர்களைச் சந்தித்து அளவளாவ இருப்பதற்கும், இந்த விஜய் தொடர்பான கருத்துக்கணிப்புக்கும் இடையே விடுவிக்க முடியாத அளவுக்கு ஒரு முடிச்சு விழுந்திருக்கிறது.
```சூப்பர் ஸ்டார்' என்பது ஓர் ஆளின் பெயர் அல்ல. ஓர் இடத்துக்கான பெயர். நாளை யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக வரலாம்'' என்று ஒரு மேடையிலேயே பகிரங்கமாகப் பேசியவர்தான் ரஜினி. அவ்வளவு பெரிய பெருந்தன்மைக்குச் சொந்தக்காரராக ரஜினி இருந்தாலும், கண்ணெதிரே அவரது சூப்பர் ஸ்டார் பதவி பறிபோவதை அவரது ரசிகக் கண்மணிகளால் கண்டிப்பாகப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விஜய் தொடர்பாக நடந்த அந்த `கில்லி' விளையாட்டு மற்றும் ரசிகர்களின் `இனி பொறுப்பதில்லை நெஞ்சே' என்பது மாதிரியான போக்குத்தான் சூப்பர் ஸ்டாரை அவரது ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக்கி இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதன் ஒரு கட்டம்தான் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ரசிகர்களுடன் ரஜினி நடத்தப்போகும் அந்தச் சந்திப்பு.
ரஜினி உண்மையாகவே ரசிகர்களைச் சந்திக்கப் போகிறாரா? அந்த சந்திப்புக்குப் பின் அறிவிக்கப்படப் போவது என்ன? என்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம் வட்டாரங்களில் நாம் வலம் வந்தோம். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சத்தியநாராயணாவுக்கு நெருக்கமாக இருக்கும் சிலரிடம் இதுபற்றி பேச்சுக் கொடுத்தோம்.
`` `குசேலன்' நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தியேட்டர் ஓனர்களும் விநியோகஸ்தர்களும் ரஜினிக்கு எதிராக, கடந்த ஆகஸ்டில் போர்க்கொடி தூக்கியபோது, ரஜினி ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக சென்னையில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை நடத்த அவர்கள் ஆயத்தமானார்கள். அந்தக் கூட்டத்தில் விநியோகஸ்தர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, ரஜினி உடனடியாக அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் அவர்கள் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தனர்.
அது சத்தியநாராயணாவின் காதுக்கு வர, அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அமைதிப்படுத்திய அவர், `விரைவில் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அப்போது, உங்கள் ஆதங்கத்தை அவரிடம் சொல்லுங்கள்' என்று உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நம்பி, அப்போதைக்கு அந்தக் கூட்டம் ரசிகர் மன்றத்தினரால் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை. அது நீரின் மேல் எழுதிய எழுத்தான நிலையில், செப்டம்பர் 4-ம்தேதி, ஷ்ரீராகவேந்திரா கல்யாண மண்டப வாசலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியே பரபரப்பானது.
அதிர்ந்து போன சத்தியநாராயணா, மீண்டும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், இந்த முறை ரசிகர்கள், சத்திய நாராயணாவின் பேச்சை காதில் வாங்கவில்லை. `இப்போதே ரஜினியிடம் பேசவேண்டும்' என்று கோஷம் போட ஆரம்பித்தனர். வேறு வழியில்லாமல் ரஜினியைத் தொடர்பு கொண்ட சத்தி, `அக்டோபர் முதல் வாரத்தில் ரஜினி உங்களைச் சந்திப்பார்' என்று ரசிகர்களிடம் உறுதி அளித்தபிறகுதான் ஒருவழியாக அங்கிருந்து கலைந்து சென்றனர் ரசிகர்கள்.
அதன் பின்பு கடந்த 27-ம் தேதி `எந்திரன்' படத்தின் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு, பெரு நாட்டிலிருந்து சென்னை வந்த சூப்பர் ஸ்டார் எப்படியும் தங்களைச் சந்தித்துவிடுவார் என்று ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்குள், கடந்த 4-ம்தேதி, `எந்திரன்' ஷூட்டிங்கிற்காக ரஜினி கோவா பறந்துவிட்டார் என்ற தகவல் வெளியானதும் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டனர் ரசிகர்கள். அதுபற்றி மீண்டும் சத்திய நாராயணாவிடம் பேசினர்.
இனிமேலும் ரசிகர்கள் பொறுக்க மாட்டார்கள் என்ற நிலையில்தான், `அக்டோபர் 12-ம்தேதி ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகி பாபா என்பவரின் மகள் திருமணத்துக்காக ரஜினி சென்னை வருகிறார். அப்போது நிச்சயம் உங்களைச் சந்திப்பார்' என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது. இந்த இறுதி நம்பிக்கையில்தான் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றன அந்த வட்டாரங்கள்.
`இதெல்லாம் சரி. உண்மையில் ரஜினி மனதில் என்னதான் இருக்கிறது?' என்று அந்த விடை தெரியாத கேள்வியை நாம் அவர்களிடம் வைத்தோம்.
``கடந்த 27-ம் தேதி பெரு நாட்டிலிருந்து சென்னை வந்த ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் தன்னைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அத்துடன், `குசேலன்' பட விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வந்த செய்திகளையும் ஒவ்வொன்றாகப் படித்தார். அப்போதெல்லாம் அருகில் இருந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் இங்குள்ள அரசியல் நிலைமையைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அத்துடன், `உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு தான் செய்ய வேண்டியது என்ன?' என்று எங்களிடமும், அவரது குடும்பத்தாரிடமும் கேட்டார். அவரது கேள்வியால் நாங்கள் சற்றுத் தடுமாறிப் போனோம். ஏதாவது சொல்லி அதனால் அவர் அப்செட்டாகிவிடக் கூடாது என்பதால் மௌனம் காத்தோம். ஆனால் சூப்பர் ஸ்டாரின் அந்தக் கேள்விக்கு அவரது குடும்பத்தார் சில யோசனைகளைச் சொன்னார்கள். அதோடு `இப்போதைய சூழ்நிலையில், அரசியல் என்ட்ரி என்பது கூடவே கூடாது' என சிலர் சொன்னதையும் ரஜினி கவனமாகக் கேட்டுக் கொண்டார்.
அந்த ஆலோசனைக்குப் பின் சில நாட்கள் தனிமையில் இருந்த அவர் திடீரென அழைப்பு வந்ததும் கோவாவுக்குச் சென்றுவிட்டார். எங்களுடன் நடத்திய அந்த ஆலோசனையினால், தனது ரசிகர் மன்றங்களை இணைத்து சமூக சேவை இயக்கம் ஒன்றைத் தொடங்கும் முடிவில் அவர் இருக்கலாம். அக்டோபர் 12-ம்தேதி, திருமண விழாவுக்கு வரும் அவர், தேர்ந்தெடுத்த சில மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து இந்த முடிவைச் சொல்லி ஆலோசனை நடத்த வாய்ப்பிருக்கிறது.. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த `சமூக சேவை இயக்கம்' பற்றி அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ரஜினியின் இந்த அறிவிப்பு, ரசிகர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். அதோடு அடிக்கடி தான் சொல்லும், `வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு' ஏதாவது நல்லது செய்வதாகவும் இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே இடைவெளி விழுந்து விட்டதை உணர்ந்துள்ள ரஜினி, இந்தச் சந்திப்பின் மூலம் புதிதாக ஒரு பாலம் போட விரும்புகிறார்'' என்று நீண்ட விளக்கத்தைச் சொல்லி முடித்தனர் அவர்கள்.
இதற்கிடையே, சூப்பர் ஸ்டாரை நடிகர் விஜய் தாண்டிவிட்டார் என்ற கருத்துக் கணிப்பு ரஜினி ரசிகர்களை உள்ளூர ரணகளப்படுத்தியிருக்கிறது. இதுபற்றி, நம்மிடம் பேசிய `ஒன்லிரஜினி டாட் காம்' என்ற வெப்சைட் நடத்தி வரும் சுந்தர், ``உடுமலையில் `குசேலன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமானநிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.
கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள். ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை'' என்று முடித்துக் கொண்டார் சுந்தர்.
இவர், இப்படி கூறினாலும் விஜய் தொடர்பான கருத்துக் கணிப்பு ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் உள்ளவர்களின் நெஞ்சில் ஒரு முள்ளை ஊன்றிவிட்டது என்கிறார்கள் சிலர். ரசிகர் மன்றங்களை இணைத்து சமூக சேவை இயக்கம் தொடங்கும் முடிவுக்கு ரஜினி வந்துள்ளதற்கு அந்தக் கருத்துக் கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
இந்தமுறையும் ரஜினி அவரது ரசிகர்களைச் சந்திக்காமல் விட்டுவிட்டால் அவரது வீடு அல்லது கல்யாண மண்டபம் முன்பு மிகப்பெரிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறாார்கள். ``1996-ல் ரஜினிக்கு அரசியலில் மிகப் பெரிய கதவு திறந்திருந்தது. அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந் நிலையில், 2011-ல் கிடைக்கும் வாய்ப்பையும் அவர் நழுவவிட்டால் திரும்பவும் அந்தக் கதவு எத்தனை முறை தட்டினாலும் திறக்காது'' என்று ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் ஆரூடம் சொன்னார்.``கட்சியும் வேண்டாம்; ஒரு கொடியும் வேண்டாம்'' என்று `ராஜாதி ராஜா' படத்தில் ரஜினி பாடுவார். இந்தநிலையில் இயக்கம் என்ற பெயரில் இப்போதைக்கு ரஜினி கொஞ்சம் இறங்கி வந்தால் கூட ரசிகர்களுக்கு அது ஓர் இனிய அதிர்ச்சியாகவே இருக்கும். `இயக்கம் தொடங்கட்டும். இறங்கிவரட்டும்' என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். என்ன செய்யப் போகிறார், சூப்பர் ஸ்டார்?

Monday, October 06, 2008

செல்வாவும் நானும்................



எங்கே இருந்து சார் வருது உங்களுக்கு இந்த கர்வம்?கொஞ்சம் படுச்சுட்டோம்கிறதிலேர்ந்தா? இல்ல கொஞ்சம் காசு பணம் இருக்கு அப்புடிங்கிறதினலயா? சொல்லுங்க எதிலேர்ந்து ? அப்புடின்னு அலைபாயுதே படத்தில ஒரு வசனம் வருமே...........


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேலூர்.


இங்குதான் நானும் செல்வாவும் ஒன்றாகப்படித்தோம், இருவருமே படிப்பில் கெட்டி(அப்ப) என்பதால் எளிதில் நண்பர்கள் ஆனோம்.இருவருமே எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது; காலையில் குளிக்க, அப்புறமா இன்ரோல் பெல்லில் ஒன்னுக்கு அடிக்க,மதியம் சத்துணவு வாங்கி சாப்புட, சாயங்காலம் வெளையாட,நைட்டுக்கு தூங்க மட்டும் அவுக அவுக வீட்டுக்கு. (இல்லாட்டி எங்கப்பா என்னை தோலை உருச்சிருவாரு) என்ன தீனி வாங்குனாலும் என்னை இல்லாம திங்காது என் செல்வா,இப்படித்தான் நாளோறு வண்ணம் பொழுதொருமேனியா எங்க நட்பு வளந்திச்சி.


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்தியமங்கலம்.


அஞ்சாம் வகுப்பிலே நாந்தேன் பஸ்ட்டு, ரெண்டு நம்ம செல்வா, அடுத்து சத்திமங்கலம் போகணும் ஆறாம் வகுப்பு. இப்பதான் நம்ம சேட்டை ஆரம்பம், புளி திருடி முந்துரிப்பழம் வாங்குறது, குவாட்டர் பாட்டில் எடுத்து ஐஸ் வாங்குறது, ஆனாலும் படிப்புல சோடை போகல ரெண்டுபேருமே.இந்த தடவை நானும் செல்வாவும் மாறி மாறி பஸ்ட்டு , செகண்டு எடுத்தோம்.ஒரு நாளு எட்டாம் வகுப்புல எல்லாரும் என்ன படிக்க போறியனு, எங்க தமிழ் அய்யா கேட்டாரு? நாங்க ரெண்டு பேருமே வக்கீலுனு சொன்னோம்,இப்படிதான் எங்க ஊரு ரோட்டுல போற ரூட் பஸ் மாதிரி வேகமா போச்சி எங்களோட நட்பு....


புனித ஆரோக்கிய அன்னை உயர்நிலைப்பள்ளி, கீரனூர்.


எட்டாம் வகுப்பு முடிந்துவிட்டது. இனிமே கீரனூருக்கு போகணும், எத்தனை குஷி எங்களுக்கு மொத மொறையா பஸ்ல போறொம், இந்த தடவை கொஞ்சம் வருத்தம் செல்வாமேல, செல்வா பஸ்ட்டுனு, அப்புறம் இன்னொரு வருத்தம் செல்வாவுக்கு மீசை லைட்டா வந்துருச்சி; இந்த நேரத்திலதான் எங்களுக்கு கேர்ள் ப்ரண்ட்டெல்லாம் அறிமுகம் கவிதா, ராணி, தமிழரசி அப்புறமா சூர்யான்னு ஏகப்பட்டது.இந்த தடவை நாங்க ரெண்டு பேருமே படிப்புல பதினாலு , பதினைந்துன்னு போயிக்கிட்டு இருந்தோம்.. முதல் பொதுத்தேர்வு., யாரு எங்க ஊருல பஸ்ட் வருவது என்பது தான் போட்டியே. ஊருக்கே தெரியும் செல்வா அல்லது நான்.முதல் முறையா நாங்க போட்ட போட்டி இதுதான்.


ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.


பத்தாம் வகுப்புல எங்க ஊருக்கு நாந்தான் பஸ்ட், செல்வா செகண்ட்.இப்ப எனக்கும் மீசை மொளைக்குது கூடவே கொஞ்சம் ஆசை, கர்வம், காதல், அகம்பாவம்....பஸ்ஸில் ஹீரோவா மாறி வரும் எனக்கும், படிப்பில் ஹிரோவா மாறி வரும் செல்வாவிற்கும் சின்ன இடைவெளி. அந்த இடைவெளி, எனக்கு புதிதாக கிடைத்த பஸ் நண்பனின் காதிலியிடம் ஏதோ ப்ராக்டிகல் சம்மந்தமாக செல்வா பேசப்போக நான் என் புது நண்பனுக்காக செல்வாவிடம் போட்ட முதல் சண்டை,அப்புறமா என்னை கெமிஸ்டரி வாத்தியார் அடிக்க அதை செல்வா நண்பர்கள் மத்தியில் சொல்லி சிரிக்க! இப்படியா எங்கள் நட்பின் இடைவெளி அதிகமாயிடுச்சி. எப்பவாவது பார்த்தால் சிரித்துகொள்பவர்களாக மாறினோம்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு, இப்படி திரிந்தால் நான் எப்படி பாஸாவது ? ஆனால் எங்க செல்வாதான் ஊரில் ப்ஸ்ட்.ஒரு நாள் டி.சி வாங்க நான் போனபோது செல்வாவும் வந்திருந்தான்.அப்போது அவன் ஒரு பார்வை பார்த்தான் பாருங்க , அதில இருந்தது அவனின் கர்வம். அதற்கப்புறம் நாங்க சந்திக்கவே இல்லை. பின்னே அவன் இஞ்சினியரிங் காலேஜ்ல படுச்சி, மெட்ராஸ்ல ஏதோ கம்ப்யூட்டர் இஞ்சினியரா இருக்கான்னு அவுக அம்மா சொன்னிச்சி.


மேலூர் தார் ரோடு.


ரோட்டில் ஒரு நாள் சைக்களில கொத்து வேலைக்கு நான் போகும் போது பின்னாடிய வேகமா வ்ந்த ஒரு சிகப்பு காரு என் மீது மோதி விட்டு கொஞ்சம் தள்ளிபோய் நின்னது. காருலேர்ந்து கண்ணாடிப்போட்ட ஒருத்தரு என்னை பார்த்து சிரிச்சுட்டு போயிட்டாரு .அப்புறமா கேட்டா அட! அது நம்ம செல்வா!!

இப்ப சொல்லுங்க சார் ...எங்க இருந்து வருது சார் இந்த கர்வம் கொஞ்சம் படிச்சதுனாலயா ,இல்ல கொஞ்சம் காசு பணம் இருக்கு அப்படிங்கிறதனாலயா.............
draft

Saturday, October 04, 2008

விலெகா வலைப்பூ தொடங்க பட்டபாடு!

சான்றோர் அனைவருக்கும் வணக்கம்!

ரொம்ப நாள் ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கு!படிக்க மட்டுமே தெரிந்த நாமளும் எழுதிப்புட்டோம்லோ. மத்தபடி ஒன்றும் இல்லிங்கோ!
நான் புதுக்கோட்டைக்காரன், படிச்சது டிப்ளமா சிவில்,சொந்த ஊரு மேலூர் கிராமம்; இப்ப பங்களாதேஷ்-ல வேலை பார்க்குறேன். படிக்கும் பொழுதே கணிப்பொறியப்பத்தி படிடா, இல்லாட்டி பின்னாடி கஷ்ட படுவேணு அப்பா அப்பவே சொன்னாரு கேட்டாதானே! இப்பதான் அதனோட அருமை தெரியுது.ஒரு பதிவு போடுறதுக்குள்ளே நான் பட்டபாடு! மண்டையில் இருந்த பாதி முடியை காணோம்.
ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

தங்களின் ஆதரவை எதிர்நோக்கி..........

விலெகா

(பி.கு :படிக்கும் போது என்ன செய்தீர் என்று கேட்க வேண்டாம்.ஏனென்றால் பக்கத்து வீட்டு கனிமொழியை பார்க்கவே நேரம் பத்தாது எனக்கு.)