Showing posts with label கவித கவித. Show all posts
Showing posts with label கவித கவித. Show all posts

Sunday, November 23, 2008

க‌விஞ‌ர் வாலியின் கவிதை

வாலியின் கவிதையுடன் என் கவிதயும் இணைந்தால் அது எப்படியிருக்கும் என்பதை பாருங்கள்:வாலி திருச்சி வானொலி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவர் ஒரு கவிதை எழுதினாராம்.,(எப்போதோ படித்தாக ஞாபகம்)அது என்னவென்றால்......
தன் தலையை

சீவியவனுக்கே!

தண்ணீர் தருகிறது
இளிநீ!!
என்னொவொரு அருமையான கவிதை பாருங்க.
இதை படிச்சதுக்கப்புறம் நம்ம சும்மா இருப்போமா.,
எழுதுடா விலெகா கவிதயை....

கேள்வி:

தன் தலையை

திறந்தவனுக்கெ!

போதை தருகிறது

பீர்!

ஆனால்.........

தன் மண்டையை

திறந்தவனுக்கு!

என்ன தருகிறான்

மனிதன்!


இப்ப‌டி நான் க‌விதை எழுதினா தெரிஞ்ச‌வ‌ங்க‌ளே அனானியா வ‌ந்து ஆணீய‌ புடுங்குறாங்க :))

இப்போ தெரிஞ்சுருக்குமே வாலிக்கும், காவாலிக்கும்(நாந்தாங்க) உள்ள வித்தியாசம்.
இருந்தாலும் ஆர்வக்கோளாரு நம்மளை இருக்க விடமாட்டேங்கிற‌து.ம‌ண்டைய‌(!) கொடைஞ்சி ஒரு க‌விதயும் எழுதிட்டேன்.(ந‌ல்லா மாட்டிகிட்டீங்க‌ போங்க‌)

சுய‌ந‌ல‌வாதி..

என் அப்பாவும் சுய‌ந‌ல‌வாதிதான்


த‌ன் க‌ன‌வுக‌ளை என் மீது சும‌த்தி

என்ன‌யும் பெரிய‌வான்னாக்கியதால்
..

மாற்ற‌ம்?

ஆறு வ‌ருட‌ம் க‌ழித்து

ஊருக்கு வ‌ந்த‌ என்னிட‌ம்

அம்மா கேட்டாள் என்னிட‌ம்

ஏதாவது தெரிகிற‌தா மாற்ற‌ம் என்று

எப்ப‌டி சொல்வேன் என் அம்மாவிட‌ம்

என் காதலிதான் என் ந‌ண்ப‌னின்
மனைவியென்று !

என் க‌விதைய‌ ப‌டிச்சிட்டு வாலி என்ன‌ சிரி சிரிக்கிறார் பாருங்க‌..

அதுனாலே ஐயாமார்களே கோவ‌ப்ப‌டாம‌ ஒரு ஓட்டை போடுங்க‌:))

Saturday, November 22, 2008

தமிழச்சியிடம் ஒரு கவிதை




தமிழச்சியின் ஒரு கவிதை

சூர்ப்பனகையின்
மூக்கையும் முலையையும்
அறுத்த‌ ராம‌ன்
ந‌ல்ல‌வென்றால்!
சீதையின்
மூக்கையும் முலையையும்

அறுக்காத‌ ராவ‌ண‌ன் ஏன்
கெட்ட‌வ‌ன் ஆனான்!
விலெகா இனிமேலும் நீ சும்மா இருக்க‌லாமா?! சொறிடா உன் ம‌ண்டைய‌ கேளுடா ஒரு கேள்விய

அடுத்த‌ பெண் மீது
ஆசைப்படாத‌ ராமன்
ந‌ல்ல‌வ‌ன் எனும் ப‌ட்ச‌த்தில்.,
அடுத்த‌வ‌ர் ம‌னைவியை
அப‌க‌ரித்து சென்ற‌

ராவ‌ண‌ன் ஏன்
கெட்ட‌வ‌னாக‌ இருக்க‌கூடாது?



அய்யயோ! ஆழ‌ம் தெரியாம‌ கால‌விட்ட ‌க‌தையா., அக்காகிட்ட‌யே கேள்வி கேட்டுட்யே!

இது மாதிரி ஆளுங்கள கூட்டி வந்து உன்னைய அடிக்கபோறாங்க போ !!

பி.கு:இதெல்லாமே ஒரு நகைச்சுவைக்காக‌தான்:))

அதுனால‌ ஐயாக்க‌ளே! கோச்சிக்காம‌ ஓட்டை போடுங்க‌

Wednesday, November 19, 2008

தாய்க்காவியம்....

எனக்கெ தெரியும்,எனக்கு கவிதை எழுத தெரியாதுன்னு.,ஆனாலும் ஒரு குருட்டு தைரியம் எழுதிட்டேன்.இயக்குனர்பார்த்திபன்(அவர் எங்கே? நான் எங்கே?) அவர் கிறுக்கலில் இப்புடி எழுதியிருப்பார் உரைநடையை இரண்டு வரி இரண்டு வரியா எழுதுனா அதாங்க கவிதை.(அது அவரு எழுதினா!)எப்புடியோ நானும் எழுதிட்டேன்.(என்னனுதான்னு எனக்கே தெரியல)


கஞ்சிய எங்களுக்கு கொடுத்துவிட்டு‍‍‍.,
வெறும்
தண்ணியை குடித்தவள்
நீ!

மிஞ்சிய பணத்தில் எல்லாம்
எங்களுக்கு அஞ்சியே!
ஆடைகள் கொடுத்தவள்
நீ!

மக்கிய குப்பைகள் அள்ளி
எங்களின் மானத்தை காத்தவள்
நீ!

பெட்டையாய் பிறந்தாலும்
எங்களுக்குள் ஆண்மையை
அளித்தவள்
நீ!

மட்டயை கட்டிவிற்றே.,
எங்களை மாடிவீட்டிற்கு
உய‌ர்த்திய‌வ‌ள்
நீ!

இப்ப‌டிப்ப‌ட்ட
நீ!நீ!நீ!நீ!நீ!

க‌ட்டையான‌ அன்று.,
ச‌ட்டையை கூட‌
க‌ல‌ட்ட‌ விட‌வில்லை,
எங்க‌ளின் க‌வ‌ர‌வ‌ம்....



தெரியாம எழுதிப்புட்டேன் சாமீ!
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))