Monday, November 24, 2008

க‌லைஞ‌ர் பாடும் பாட்டு!

இப்போ இருக்கிற சூழ்நிலையில நம்ம அரசியல் கட்சித்தலைவர்கள் அனவருக்கும், ஆளாளுக்கு ஒரு பிரச்சனை இருக்கு.(ஆமா, என்னைக்குதான் இவுங்க பிரச்சனை பண்ணாம இருந்துருக்காங்க!) இது மாதிரி நேரத்துல அவங்கள பாடச்சொன்னா என்ன பாட்டு பாடுவாங்க...
..............................**************.........................
நம்ம பாடச்சொன்னப்ப கலைஞர் இப்படி பாடுகிறார்:"என் வீட்டு கன்னுக்குட்டி என் மீது மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடா மாறா என் மாறா"

அப்புடியே "மாறா"ம இருங்க., நாங்க அடுத்த இடத்துக்கு போறோம்,
.............................*****************..................................
வை.கோ யார் மேல கோபமா இருக்கார்னு தெரியல விசும்பிக்கிட்டெ இப்புடி பாடுறார்: "சொர்க்கமெ என்றாலும் அது நம்ம ஊர போல வருமா? அது லண்டனே என்றாலும் நம்ம லால்குடிக்கு ஈடாகுமா"

ஈடாகாவே,ஆகாதுங்க,.நீங்க பாடுவ‌தை மட்டும் நிறுத்துங்க.இல்லாட்டி சுத்தி இருக்கிரற‌வுகளுக்கு ஏதாச்சும் ஆகிப்போயிரும்.
...........................**************.............................
சரி வாங்க ஒரு எட்டு தைலாபுரம் போயிட்டு வந்துருவோம்னு போனா அங்க நம்ம மருத்துவரய்யா:"மாம்பழம் விக்கிற கண்ணம்மா உன் மனசுக்குள்ள என்னம்மா,என் கூட்டணி வச்சுக்க சம்மதமா" .
ஐய்யாயோன்னு நாம தெரிச்சு ஓடிவந்துக்கிட்டு இருக்கையில..
.............................***************..............................
பொள்ளாச்சியில நம்ம கேப்டன் சார் சூட்டிங் நடக்குதுஙக.அதுல ஒரு பாட்டு வருதுங்க என்னன்னா:"தனியெ தன்னந்தனியே நான் காத்து காத்து இருந்தேன்,மனமே பொறு மனமே கம்யூனிஸ்டு வருவார்கள் மனமே".
லால லாலலா லால லாலலா பாட்டா இருக்குமுனு பார்த்தா இது நொந்த லாலா பாட்டாலப்பா இருக்கு..
.....................************.......................
இப்புடி அவுங்க‌ பாட்டை கேட்டதில்ல‌ என் ம‌ண்ட‌ காஞ்சி, ம‌றை க‌ழ‌டும் நேர‌த்தில‌ திருவாள‌ர் பொதுஜ‌ன‌ம் இப்புடி பாடுறாங்க‌:"தி.மு.க‌ ஆண்டா என்ன?, அ.தி.மு.க ஆண்டா என்ன? உழைச்சாதான் ந‌ம்ம‌ளுக்கு சோறு".
................****************.......................
உண்மைதாங்க‌ நான் என் பொழ‌ப்ப‌ பாக்குறேன் சாமீ "பாட்டு கேட்டா வீட்டுக்கு யாரு கொடுப்பா சோறு ".

நீங்களும் எனக்கு ஒரு ஓட்டைபோட்டுட்டு போயிருங்க:))

18 comments:

விலெகா said...

வாங்க! வாங்க‌! வ‌ண‌க்க‌ம்!

நமீதா said...

நான் இன்னுயிக்கு நல்லா சிர்ச்சிது....
நன்டி

Anonymous said...

anne banlathesula pasu maadu niraya irukkaa?

விலெகா said...

Anonymous said...
anne banlathesula pasu maadu niraya irukkaa?

எறுமை குறைவா இருக்கு நீங்க வாறீயளா:)))

விலெகா said...

நமீதா said...
நான் இன்னுயிக்கு நல்லா சிர்ச்சிது....
நன்டி

வாங்க நமீதா ரொம்ப‌ நன்டி

கார்க்கி said...

ஆஹா.. அடுத்த வலையுலக ஹீரோ தயார் ஆகிறாரு.. கலக்கல் சகா

நசரேயன் said...

/*உழைச்சாதான் ந‌ம்ம‌ளுக்கு சோறு*/
ஆமா ..

விலெகா said...

கார்க்கி said...
ஆஹா.. அடுத்த வலையுலக ஹீரோ தயார் ஆகிறாரு..

கார்க்கி said...
ஆஹா.. அடுத்த வலையுலக ஹீரோ தயார் ஆகிறாரு.. சகா என்னை வச்சி காமெடி கிமேடி பண்ணலையே:))))

விலெகா said...

கார்க்கி said...
ஆஹா.. அடுத்த வலையுலக ஹீரோ தயார் ஆகிறாரு.. கலக்கல் சகா

அடுத்தவங்கள பாராட்டும் மனசு ஒரு சிலருக்குதான் இருக்கும் அது உங்களுக்கு நெறையாவே இருக்கு சகா.
ரொம்ப நன்றிங்க!

விலெகா said...

நசரேயன் said...
/*உழைச்சாதான் ந‌ம்ம‌ளுக்கு சோறு*/
ஆமா ..

ஆமா இல்லீங்க,ஆமாம,ஆமாம ஆம

விலெகா said...

வாங்க! வாங்க‌!
நசரேயன் ரொம்ப நன்றிங்க!

Chuttiarun said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

அதிரை ஜமால் said...

எங்க ஆளையே கானோம் வலைப்பகுதிகளில்.

விலெகா - நீங்கள் விளெகாமல் வாருங்கள்

எம்.எம்.அப்துல்லா said...

தம்பி நலமா??

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Bala said...

பொது ஜனம் இப்படித்தான் பாடும் ....
"காசேதான் கடவுளடா... அந்த எலெக்சன் கமிஷனுக்கும் இது தெரியுமடா..."

வாழ்த்துக்கள் நண்பரே...