என்னை என் வாத்தியார் மேல என்ன படிக்கப்போற என கேட்டப்ப நான் உடனே சொன்னது வக்கீலுக்கு, ஏன் தெரியுமா எல்லோரும் சொல்லுவார்கள் வக்கில்,டாக்டர் இவுங்களிடம் எல்லாம் உண்மையை தான் சொல்லனும்னு அதுக்காகத்தான்.,அப்புடி ஒரு உன்னதமான படிப்பை நடுவீதிக்கு கொண்டுவந்திட்டாங்களேயா நாறப்பயலுவ:(
செத்த பாமபை அடிக்கிறவனை நம்ம ஊரில வீரமில்லாதவன்னு சொல்லுவாங்க,அப்புடி ஒரு பையனை போட்டு செத்த பாம்பை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்களே இதான் வீரமா?
நான் இப்ப இருக்கிறது பங்களாதேஷத்தில, இங்கே எப்பவுமே கல்லூரிகளிலே ஒரே கலவரம் நடந்துகொண்டேயிருக்கும். அப்ப நான் அவர்களிடம் சொல்வது இது மாதிரியெல்லாம் எங்க ஊருலே நடக்காது.,நேற்று நான் தமிழிஷ் பார்த்துக்கொண்ருந்த பொழுது ஒரு பங்களா நண்பனும் என் அருகில் இருந்தான், மொழி தெரியாவிட்டாலூம் படத்தை பார்த்து புரிந்துகொண்டான்,என்னிடம் விளக்கம் கேட்டறிந்து கொண்டு அவன் சொன்னது இது தான் "உங்க ஊருக்கு எங்க ஊரு எவ்வளவோ தேவலை".என்னால் தலைகுனிவதை தவிர வேறு ஒன்றும் கூறமுடியவில்லை.
ஒவ்வொரு வலைப்பதிவிலும் தெரியும் ஆத்திரம் அவர்களை ஒன்றும் செய்து விடப்போவதில்லை,சாதிகளை கொண்டே அரசியல் நடந்துகொண்டிருக்கும் நம் தமிழகத்தில் இன்று ஒரு பாரதிக்கண்ணன்,நாளை ஒரு சாரதிக்கண்ணன்.
இவர்கள் ஒரு நாளும் திருந்தப்போவதில்லை.
ஒன்று மட்டும் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" தாய் கொடுத்த பாலை இப்படி ரத்தமாக ஓட விட்டுருக்கிறீர்களே, உங்களின் ரத்தமும் ஒரு தாய் கொடுத்ததுதானே?இரண்டும் ஒரே நிறந்தானே?"., ரத்தத்தை கொண்டு சாதீ வளக்காதீர்கள். முடிந்தால் அறிவைக்கொண்டு "தமிழ் சாதியை" வளருங்கள்.
Friday, November 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
SUPER.............
ஒன்று மட்டும் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்
உங்க ஊருக்கு எங்க ஊரு எவ்வளவோ தேவலை
நன்றி! நசரேயன்.
நசரேயன் said...
உங்க ஊருக்கு எங்க ஊரு எவ்வளவோ தேவலை
ஹிஹிஹி எந்த ஊரு?
ரொம்ப கேவலம் தானுங்கோ...!
என்ன பண்றது?
நன்றி! Arnold Edwin,
நன்றி! முரளிகண்ணன்.
இதையும் கொஞ்சம் படிங்க
http://vinavu.wordpress.com/2008/11/13/tmstar4/
//செத்த பாமபை அடிக்கிறவனை நம்ம ஊரில வீரமில்லாதவன்னு சொல்லுவாங்க,அப்புடி ஒரு பையனை போட்டு செத்த பாம்பை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்களே இதான் வீரமா?//
சிறு திருத்தம்
.....செத்த பாம்பை அடிக்கிற மாதிரி அடிக்கிரின்களே நீங்க ஆம்பளைங்கள?.
இவிங்க சட்ட கல்லூரி வாசல் போட்டாங்க. இவிங்க
தலைவங்க சட்ட சபைக்குள்ள போட்டாங்க .நமக்கு
மறந்து போச்சு இத பார்த்து எனக்கு ஒரு தெலுங்கு டப்பிங் படம் ந்ஜ்பகம் வந்து ஒரு கவிதை போட்டேன் . அங்க வந்து பாருங்க .
.
thanks for your comment
Post a Comment